முளைக்கட்டிய கொள்ளு குழம்பு செய்வது எப்படி?

0
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. 
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். 
உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். 

அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைக்கப்பட்ட உடல் எடை எளிதில் குறையும்.
தேவையான பொருட்கள் : .
 
முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்
 
கத்தரிக்காய் - 5
 
சின்ன வெங்காயம் - 2
 
தக்காளி -  3
 
வரமிளகாய் - 5
 
கொத்தமல்லி - 25 கிராமம்
 
சீரகம் - சிறிதளவு
 
பட்டை - ஒரு துண்டு 
 
தேங்காய் துருவல் - சிறிதளவு
வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்வது எப்படி? 
செய்முறை : .
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு வைப்பதற்கு முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, வர மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 

இந்த கலவை வதங்கிய பின்பு ஒரு கண்டு பட்டை மற்றும் சீரகத்தையும் போட்டு நன்கு வதக்கவும் பின் இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
 
கொள்ளினை மூளை கட்டுவதற்காக ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் வெள்ளைத் துணியில் அதை நன்கு கட்டி ஒரு பாத்திரத்தை அதன் மேல் கவித்தி மூடி வைத்துவிடவேண்டும். 

ஓரிரு நாளில் முளை நன்கு வரும். இந்த முளைக்கட்டிய கொள்ளினை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு கத்திரிக்காயை நறுக்கி போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
கத்திரிக்காய் முக்கால் பாகம் வெந்த உடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை அதில் ஊற்றி வேக விட்டு சிறிதளவு தண்ணீரையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

ஒரு கொதி வந்தவுடன் சிறிது மஞ்ச பொடி தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இந்த கலவை நன்கு கொதித்தவுடன் இறக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.
 
எளிய முறையில் உடல் எடையை குறைக்க கூடிய முளைகட்டிய கொள்ளு குழம்பு தயார். இதனை சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)