சுவையான ஆலு சாட் மசாலா செய்வது எப்படி?

சுவையான ஆலு சாட் மசாலா செய்வது எப்படி?

0

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

சுவையான ஆலு சாட் மசாலா செய்வது எப்படி?
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. 

உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

சரி இனி உருளைக்கிழங்கு கொண்டு சுவையான ஆலு சாட் மசாலா செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.

டயாபெடிக் ப்ரெண்ட்லி குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : . 

உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்) 

காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் 

உலர்ந்த மாங்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 

சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 

சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் 

புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன் 

கொத்தமல்லி புதினா சட்னி - 1/2 டேபிள் ஸ்பூன் 

ஓமப் பொடி (சேவ்) - தேவையான அளவு 

கொத்த மல்லி நறுக்கியது - தேவையான அளவு 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

மாதுளை - அலங்காரத்திற்கு 

கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

செய்முறை : . 

சுவையான ஆலு சாட் மசாலா செய்வது எப்படி?

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும். 

உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். 

அனாதனா குல்சா (கோவா) செய்வது எப்படி?

பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும் பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும் இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும். 

இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் சூப்பரான ஆலு சாட் ரெசிபி ரெடி

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)