டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி?

டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி?

0

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். 

டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி?

பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். 

உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது. 

வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். 

சரி இனி பூசணிக்காய் கொண்டு டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள் : .

பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம் 

உருளைக்கிழங்கு - 1 

சோளமாவு - 2 தேக்கரண்டி 

அரிசி மாவு - 2 தேக்கரண்டி 

மிளகு தூள் - 1 தேக்கரண்டி 

கறி மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி 

ரொட்டித்தூள் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

பெண்களின் மார்பகம் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டிய விஷயம் !

செய்முறை : .

டேஸ்டியான பூசணிக்காய் கட்லெட் செய்வது எப்படி?

துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேக வைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். 

உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் குளிர வைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, 

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம் பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். 

குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 

இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். 

அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 

இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார். இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)