அனாதனா குல்சா (கோவா) செய்வது எப்படி?





அனாதனா குல்சா (கோவா) செய்வது எப்படி?

தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்

பால் - 1/2 கிண்ணம்

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 2

மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம்

பச்சை மிளகாய் - 4

எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு

கொத்துமல்லி - சிறிதளவு

உப்பு - சிறிதளவு
செய்முறை:
அனாதனா குல்சா (கோவா)
மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும். மாதுளை முத்துகள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து உருண்டை களாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை அப்பளமாகத் திரட்டவும். 

மாதுளை உருண்டையை உள்ளே வைத்து, மூடி மேலும் திரட்டவும். சூடான கல்லில் போட்டு, இருபுறமும் திருப்பி நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
Tags: