முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி?

முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி?

0

கோடையில் வயிற்றுக்கு குளிர்ச்சி தரவும் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் முலாம் பழங்களை சாப்பிடலாம்.

முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி?

இதனால் கோடைகால பிரச்னைகளை தவிர்ப்பதோடு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். இந்த பருவ காலத்தில் கிடைக்கக் கூடிய முலாம் பழங்களை உண்டு பயன் அடையுங்கள்.

பொதுவாக முலாம் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த முலாம் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். 

அந்த வகையில் முலாம்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி? என்று இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள் : .

முலாம்பழம் - 200 கிராம்

ஸ்ட்ராபெர்ரி - 3

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1/2 டீஸ்பூன்

ஐஸ் கட்டி - 2

காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !

செய்முறை : .

முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி?

முதலில் முலாம் பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி களையும் சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.

இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை, தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். 

காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !

இதை வடிகட்டாமல் குடித்தால் நார்ச்சத்துக்களை இழக்காமல் முழு நன்மைகளையும் பெறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)