டேஸ்டியான முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

டேஸ்டியான முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

0

முலாம்பழத்தை பழச்சாறாக குடித்தால் கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப்படுத்தும்.  

டேஸ்டியான முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். 

முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்வது எப்படி?

பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்  கடுப்பு போன்றவை குறையும். 

முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை  தீரும். 

சரி இனி முலாம்பழம் கொண்டு டேஸ்டியான முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : .

முலாம்பழம் - 200 கிராம்

பால் - 1 கப்

கிரீம் - 1/2 கப்

கஸ்டர்ட் பவுடர் - 1 டீஸ்பூன்

வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

நுரையீரலை பாதுகாக்கும் பச்சைப் பட்டாணியின் பயன்கள் ! 

செய்முறை : .

டேஸ்டியான முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

முதலில் முலாம் பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக கஸ்டர்ட் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

இதனுடன் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். இது திக்காகி கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

தன் வயதை விட அதிக வயதுடைய பெண்களை பிடிக்க காரணம் என்ன?

கஸ்டர்ட் பால் கலவை நன்கு ஆறிய பிறகு, இதனுடன் அரைத்து வைத்துள்ள முலாம்பழம், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை ஃப்ரீசரில் 5-6 மணி நேரம் வைத்து பரிமாறலாம். கோடைக்கு உகந்த இந்த இரண்டு ரெசிபிக்களை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)