சாப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்வது எப்படி?





சாப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்வது எப்படி?

0

குழந்தைகளுக்கான சாஃப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு மென்மையான கிரீம் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். சாஃப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்து அவர்களுக்குக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் : .

பெரிய முட்டைகள் - 4 விப் செய்து கொள்ளவும்

முட்டை மஞ்சள் கரு - 1 விப் செய்து கொள்ளவும்

மாவு - 1/3 கப்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் 

தூளாக்கிய வெள்ளை சர்க்கரை - 1/2 கப் 

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் 

உட்பொருள் நிரப்புவதற்கு : .

கிரான் பெர்ரிகள் - 1 கப் 

சர்க்கரை - கால் கப் 

தண்ணீர் - அரை கப் 

விப்டு கிரீம் - 1 கப் 

நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் !

செய்முறை : .

சாப்ட் ஸ்பாஞ்சி ஸ்விஸ் ரோல் கேக் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில், கிரான் பெர்ரிகள், அரை கப் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து சூடாக்கவும். அது ஜாம் போன்ற பதத்துக்கு வந்தவுடன் மற்றும் கிரான் பெர்ரிகள் மிருது வானவுடன் நிறுத்தவும். 

சூட்டில் இருந்து எடுத்து, குளிர விடவும். மிருதுவான பேஸ்ட்டாக இதை அரைத்துக் கொண்டு, சாஸை உருவாக்கி, ஓரமாக வைத்து விடவும். மைக்ரோ அவனை 230 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்கவும். 

சிறுநீரின் நிறத்தை கொண்டு இதை கண்டுபிடிக்கலாம்?
>ஒரு 17க்கு 12 பேக்கிங் பேனில் எண்ணெய் தடவி, அதில் பார்ச்மென்ட் பேப்பர் வைத்து, பேப்பரிலும் எண்ணெய் தடவி வைக்கவும்.

இரண்டு முட்டைகளைப் பிரித்துக் கொண்டு, மஞ்சள் கருக்களை ஒரு பாத்திரத்திலும், வெள்ளை கருக்களை மற்றொரு பாத்திரத்திலும் வைக்கவும்.

பிரிக்கப்பட்ட மஞ்சள் கருக்களிலில், மேலும் 1 மஞ்சள் கருவையும் மீதமுள்ள முழு முட்டைகளையும் சேர்க்கவும். இப்போது, ஒரு சிறிய பாத்திரத்தில், மாவை சலித்து, சோள மாவைச் சேர்த்துக் கொள்ளவும்.

முட்டை மஞ்சள் கருக்களை அதிக வேகத்தில் ஐந்து நிமிடங்கள் கலந்து, அது திக்கான, வெளிர் மஞ்சள் நிறத்தில், பொசு பொசுவென மாறும் வரை கலந்து கொள்ளவும்.

வெனிலா எசென்ஸையும், சலித்த மாவில் பாதி அளவையும் இதில் கலந்து, மிருதுவாக கலந்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவை ஈரமாவில் கலந்து கலந்து கொள்ளவும்.

இப்போது வேறொரு பாத்திரத்தில், வெள்ளைக் கருக்களை நன்கு அடித்து, அவை நுரைத்து, வெளிர் நிறமாகவும் வரை அடித்துக் கலக்கவும்.

மீதமுள்ள ஒரு மேசைக் கரண்டி சர்க்கரையை மேலே தூவி, அவற்றையும் நன்கு கலக்கவும். முட்டை வெள்ளைக் கருக்களை மிருதுவாக கலக்கவும்.

இந்த மாவை, ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஸ்பூன் அல்லது கரண்டி மூலமாக சீராகப் பரப்பி விடவும்.10 நிமிடங்கள் பேக்கிங் செய்யவும் அல்லது பொன்னிறமாகும் வரை பேக்கிங் செய்து, கொள்ளவும்.

ஓவனில் இருந்து எடுத்து, அதை ஒரு சுத்தமான பாத்திரத்தின் மேல் கவிழ்த்து வைக்கவும். பார்ச்மெண்ட் பேப்பரை அகற்றி விட்டு, டவலைப் பயன்படுத்தி, ஸ்பாஞ்சை உருட்டிக் கொள்ளவும். 

5 முதல் 10 நிமிடங்கள் ஸ்பாஞ்ச் குளிர விடவும். கிரான்பெர்ரி ரோலை அசெம்பிள் செய்ய, டவலில் இருந்து ஸ்பாஞ்சை எடுத்து, ஒரு மெல்லிய லேயர் கிரீமை பூசவும். 

அதன் மேல் கிரான்பெர்ரி சாஸின் மற்றொரு லேயரை பரப்பவும். லேசான ஈரமான கிச்சன் டவலை வைத்து மூடி, சில மணிநேரங்கள் ஃப்ரிட்ஜில் குளிர விடவும்.

பரிமாறுவதற்கு முன்பு, மேலே ஐசிங் சர்க்கரையைத் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)