சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?





சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?

0
நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப் படும். 
சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?
பின் மோர் வயிற்றைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கும். மேலும் மோர் செரிமானத்தை  மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும். 
மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். 

மேலும், மோர் அதிகப் படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

சரி இனி கொத்தமல்லி இலை கொண்டு சுவையான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையானவை : .  

தயிர் – 500 மில்லி 

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு 

இஞ்சி – ஒரு சிறிய துண்டு 

பச்சை மிளகாய் – 1 அல்லது 2 

தண்ணீர் – ஒரு லிட்டர் 

கறிவேப்பிலை – சிறிதளவு 

உப்பு – தேவையான அளவு 
உதடுகளில் ஏற்படும் கருமையான நிறத்தை போக்க !
செய்முறை : .  
சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?
கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். 

இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும். 
குறிப்பு: 

வெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். 

இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புத பானம் இந்த மசாலா மோர். நீங்களும் சுவைத்து பார்த்து ருசித்திடுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)