பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.

ஆல்மண்ட் கோல்ட் காபி தயார் செய்வது எப்படி?
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். 

நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர் களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். 

தினமும் 3 கப் டீ குடிச்சா.. இடுப்பளவை குறைக்கலாம் !

இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து  பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். 

ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான். 

தூங்கும் முன் இரவில் பாதாம் பருப்பை ஊற வைத்து காலையில் சாப்பிட வேண்டும். ஊற வைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். 

சரி இனி பாதாம் கொண்டு டேஸ்டியான ஆல்மண்ட் கோல்ட் காபி தயார் செய்வது எப்படி?  என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 

தேவையானவை : .

குளிர்ந்த பாதாம் மில்க் - 2 கப் (முதல் நாள் இரவே அரை கப் பாதாமை ஊற வைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டவும்)

காபி டிகாக்‌ஷன் - 4 டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

ஆணுறுப்பு, மார்பகம் மட்டும் கருமையாக காணப்படுவது ஏன்?

செய்முறை : .

ஆல்மண்ட் கோல்ட் காபி தயார் செய்வது எப்படி?
எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் நுரைக்க அடித்து கப்களில் ஊற்றிப் பரிமாறவும். இதனுடன் வீட்டிலேயே செய்த சாக்கோ சிப்ஸ் குக்கீஸைப் பரிமாறலாம்.