சுவையான அவல் வெண் பொங்கல் செய்வது எப்படி?





சுவையான அவல் வெண் பொங்கல் செய்வது எப்படி?

0
அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். 
சுவையான அவல் வெண் பொங்கல் செய்வது எப்படி?
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். 

வெறும் அவலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். காலை சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது. சமையல் செய்வது போல வேக வைத்து தாளித்து சாப்பிடுகின்றனர். பாலில் கலந்தும் சாப்பிடுகின்றனர்.

சரி இனி அவல் கொண்டு சுவையான சுவையான அவல் வெண் பொங்கல் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : 

அவல் - 1 கப் 

பாசிப்பருப்பு - கால் கப், 

பெருங்காயத் தூள் - சிறிதளவு, 

எண்ணெய், நெய் - தேவைக்கு மிளகு, 

சீரகம் - சிறிதளவு, 

பச்சை மிளகாய் - 2, 

இஞ்சி - 1 துண்டு, 

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு, 

உப்பு- தேவைக்கு 
செய்முறை : 
சுவையான அவல் வெண் பொங்கல் செய்வது எப்படி?
ப.மிளகாய், இஞ்சி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் பாசிப்பருப்பை போட்டு உதிரியாக வேக வைத்துக் கொள்ளுங்கள். 

வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள். 
மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்த மல்லி தூவி இறக்கி பரிமாறவும். அவல் கார பொங்கல் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)