சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி?

சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி?

0

கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வரும் கடலை மிட்டாய் தான், பிரேசில் நாட்டின் பாரம்பரிய இனிப்புப் பண்டமாம். இதைப் பற்றி நா ஊற வைக்கும் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்.

சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி?

கோவில்பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய்களுக்கு மட்டும் எப்படி ஒரு அட்டகாசமான சுவை கிடைக்கிறது? அதற்குக் காரணம் இந்த ஊரின் மண்வாசனை. 

அங்கு விளையும் தரமான கடலை மற்றும் தலைமுறைகள் தாண்டி இதை செய்யும் உற்பத்தி யாளர்களின் கைப்பக்குவம் என்று நம்புகிறார்கள்.

சுவையான வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி?

உடலுக்கு நன்மை தரும் கடலை மிட்டாய்

கடலை மிட்டாய் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். 

ஆனால் கடலை மிட்டாயில் இனிப்பும் சேர்ந்திருப்பதால் அந்தப் பிரச்சனை இல்லை. இதை சாப்பிடும் போது மண்ணீரலுக்கு நேரடியாக சத்து கொடுக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

சரி இனி கடலை கொண்டு சுவையான சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :

வெல்லம் - 1 கிலோ

நிலக்கடலை - 200 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

வெல்லப் பாகு - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

தேங்காய் துருவல் - தேவைப்பட்டால்

ஏலக்காய் பொடி - தேவைப்பட்டால்

சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?

செய்முறை :

சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி?

முதலில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

பாகு நன்றாக திக்காக இருக்க வேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்ச வேண்டும். இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும். 

வியப்பளிக்கும் மருத்துவ குணங்களை கொண்ட நெய் !

தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக் கொள்ளலாம். மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.

அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)