சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?





சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?

0
சேனைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. இது உடலை வலுவடையச் செய்யும்.
சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?
மேலும், இது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோய் போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. 
எனவே, சேனைக்கிழங்கு நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். சேனைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். 

சேனைக்கிழங்கு உடலில் பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலிய வற்றையும் இது குணமாக்குகிறது.

சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையானவை:

சேனைக் கிழங்கு – 250 கிராம்,

சோம்பு – ஒரு டீஸ்பூன்,

கசகசா – ஒரு டீஸ்பூன்,

பூண்டு – 4 பல்,

சின்ன வெங்காயம் – 2,

மிளகாய் வற்றல் – 6,

தனியா – 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – 100 மில்லி,

உப்பு – தேவையான அளவு. 
செய்முறை:
சேனைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படி?
சோனைக் கிழங்கை தோல் சீவி பிரெட் ஸ்லைஸ் வடிவத்தில் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.

சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகிய வற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
வேக வைத்த சேனைத் துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, நான்-ஸ்டிக் தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுத்து இறக்கவும்.

குறிப்பு:

மசாலா வாசனையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)