சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?





சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?

0
இந்த சாட் மசாலா மட்டும் வீட்டில் இருந்தால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருட்களை செய்து அசத்தலாம். 
சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?
குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த தொகுப்பில் சாட் மசாலா பொடி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
 
தேவையான பொருட்கள் : .
 
சீரகம் கால் - டேபிள் ஸ்பூன் 
 
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
 
சுக்கு பொடி - அரை டேபிள் ஸ்பூன்
 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
 
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 
பெருங்காயம் - அரை டேபிள் ஸ்பூன் 
 
கருப்பு உப்பு (Black Salt) - 1 டேபிள் ஸ்பூன்
 
மாங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
 
புதினா - சிறிதளவு
 
செய்முறை :  .
 சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியில் கால் டேபிள் ஸ்பூன் அளவு சீரகத்தை எடுத்து இரண்டு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். வருத்த சீரகத்தை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். 
 
பின் அரை டேபிள் ஸ்பூன் அளவு மிளகை 2 நிமிடம் நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். சிறிதளவு புதினாவை கருப்பு நிறம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். 

இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !

புதினாவை காய வைத்து வறுக்கலாம் அல்லது Fresh-ஆன இலையை வறுத்து கொள்ளலாம். 
 
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு வாணலியின் சூட்டில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் 
 
மல்லித்தூள், அரை டேபிள் ஸ்பூன், சுக்கு பொடி, அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம்,1 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (Black Salt), 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 
 
மாங்காய் பவுடர் செய்வதற்கு கிளி மூக்கு மாங்காய் எடுத்து அதில் உள்ள தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து கொள்ளவும். 
 
காய வைத்து மாங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்தால் மாங்காய் பவுடர் ரெடி ஆகிவிடும். இப்பொழுது வருத்து வைத்த மிளகு, சீரகம், புதினாவை சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 

மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?

இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடியையும் வாணலியில் இருக்கும் தூள்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி கொள்ளவும். 
 
இதை ஒரு Bottle -ல் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த சாட் மசாலா பொடியை நீங்கள் சாட் வகை உணவுகள் செய்யும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)