அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?





அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?

0
குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள். 

பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். 

இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. 

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும்.

என்னென்ன தேவை?

சுகர் குக்கீஸ் செய்ய…

மைதா - 1 - 1/2 கப்

வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

தயிர் - 1 மேஜைக் கரண்டி

வெனிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி.

ஐஸிங் செய்ய…

ஐஸிங் சுகர் - 1 கப்

சுகர் ஸ்ப்ரின்க்ல்ஸ் - தேவைக்கேற்ப

ஃபுட் கலர் - தேவைக்கேற்ப

வெனிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி

பால் - 2 மேஜைக் கரண்டி.

எப்படிச் செய்வது?

சுகர் குக்கீஸ்…
அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?
முதலில் குக்கீஸ் செய்து கொள்ளலாம். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, ஒரு விஸ்க் கொண்டு கலந்து கொள்ளவும்.

இன்னொரு கிண்ணத்தில், மிருதுவான வெண்ணெய், சர்க்கரை சேர்த்து, நன்கு நுரைத்து லேசாகும் வரை, ஒரு விஸ்க் கொண்டு அடிக்கவும். எலெக்ட்ரிக் விஸ்க் கொண்டு செய்தால், 3 அல்லது 4 நிமிடங்கள் ஆகும்.

இதில் எசென்ஸ் மற்றும் தயிர் சேர்த்து, மேலும் இரு நிமிடம் அடிக்கவும். கலந்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

ஒட்டாத மாவு கிடைத்ததும், அதை தடிமனாக திரட்டி, பிளாஸ்டிக் வராப் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணி நேரமாவது வைக்கவும்.
பிறகு ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து, சிறிது மாவு தூவி, 3-5 மி.மீ. மொத்தத்திற்கு திரட்டவும். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு குக்கீஸ் கட்டர் கொண்டு வெட்டவும்.

ஓரங்களை முதலில் கையால் எடுத்து விட்டு, வெட்டிய வடிவங்களை, ஒரு தோசை திருப்பி கொண்டு கவனமாக எடுத்து,  

ஒரு பேக்கிங் ட்ரேயில், பட்டர் பேப்பர் /  பார்ச்மென்ட் பேப்பர் பரப்பி, அதன் மேல் வெட்டி எடுத்த குக்கீஸை வைக்கவும்.

அவனை 170 டிகிரி செல்சியஸ் சூட்டிற்கு ப்ரீ ஹீட் செய்து, 10-12 நிமிடம் வரை பேக் செய்யவும். பேக் செய்த குக்கீஸை ஆற வைத்துக் கொள்ளவும்.

ஐஸிங்… 
அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?
ஒரு கிண்ணத்தில், ஐஸிங் சுகர், வெனிலா எசென்ஸ், பால் சேர்த்து வழுவழுப்பாக கலக்கவும். கட்டி இல்லாமல், கெட்டியாக இருக்க வேண்டும். 

அதே சமயத்தில், ஊற்றினால் ஊற்றும் அளவிற்கு இருக்க வேண்டும். தேவை என்றால், சிறு துளிகள்ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

கலந்த ஐஸிங்கை, ஒரு பாலிதீன் பை அல்லது சிப் லாக் பையில் நிரப்பி, கோன் போல செய்து கொள்ளவும். மேலே ரப்பர் பேண்ட் போட்டு வைக்கவும்.
நுனியில் மிகச் சிறிய துளை போடவும். கத்திரிக்கோல் வைத்து சிறிய பாகத்தை வெட்டி எடுத்தால் துளை கிடைக்கும். முதலில் குக்கீஸின் ஓரங்களில் விருப்பமான வடிவத்தை வரைந்து வைக்கவும்.

பிறகு, எல்லா குக்கீஸையும் இதே போல வரைந்து முடித்தவுடன், முதலில் வரைந்த குக்கீஸில், ஐஸிங்கை கொஞ்சமாக நிரப்பவும். 

மேலே சுகர் ஸ்ப்ரின்க்ல்ஸ் தூவவும். ஒரு மணி நேரம் வைத்தால், ஐஸிங் நன்கு காய்ந்து விடும். பிறகு, காற்று புகா டப்பாவில் போட்டு வைக்கவும்.

உங்கள் கவனத்திற்கு…
அருமையான சுகர் குக்கீஸ் வித் ஐஸிங் செய்வது எப்படி?
குக்கீஸ் மாவு மிகவும் தளர இருப்பின், ஒரு மேஜைக் கரண்டி மாவு மேலே தூவி பிசைந்தால் கெட்டி ஆகி விடும். மாவை, ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்பே ஓரளவு திரட்டி வைக்க வேண்டும்.
இல்லையானால் பிறகு திரட்டுவது கடினம். மாவு திரட்டும் பொழுது உடைந்தது என்றால், கையால் சேர்த்து திரட்டவும். குக்கீஸ் வெள்ளையாக இருந்தால் தான் அழகாக இருக்கும். 

சிவக்க விட வேண்டாம். ஓரத்தில் முதலில் ஐஸிங்கை வரைந்தால் தான் பிறகு நிரப்பும் பொழுது வழிந்திடாமல் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)