தேவையான பொருட்கள் :
கோழிக்கறி – 1/2 கிலோ 

சாம்பார் வெங்காயம் – 200 கிராம் 

தக்காளி – 200 கிராம் 

மிளகாய் – 6 

கொத்த மல்லி இலை – 1/2 கட்டு 

புதினா – 1/2 கட்டு 

தேங்காய் துருவியது – 1/2 மூடி 

தயிர் – 1/2 குழிக்கரண்டி 

கசகசா – 1 டீஸ்பூன் 

உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப 

தாளிக்க சோம்பு – 1 டீஸ்பூன் 

பட்டை, லவங்கம் – தலா 2 
செய்முறை :
மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?
கோழிக் கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். 

கொத்த மல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் இவற்றை தாளிக்கவும். 
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். 

அரைத்த தேங்காய், புதினா கொத்த மல்லி இலை விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும். சிக்கன் வெந்ததும், தயிரை ஊற்றி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திரு ந்து இறக்கவும்.