டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி?

டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி?

0

தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள். 

டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி?
மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். 

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். 

தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

சரி இனி தேங்காய்ப்பால் கொண்டு டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம்  செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல... !
தேவையான பொருள்கள்

தேங்காய் - அரை மூடி

சுக்குப் பொடி - அரை ஸ்பூன்

மஞ்சள் - அரை ஸ்பூன்

மிளகு பொடி - அரை ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

செய்முறை

டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி?

தேங்காயை நன்கு துருவி, சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பால் தவிர மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து 1 ஸ்பூன் அளவு பசும்பால் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

சாப்பிட்ட உடன் செய்ய கூடாதது?

இதை தேங்காய்ப் பாலில் கலந்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தவும். தேங்காய்ப் பாலை அதிகமாக சூடு செய்யக் கூடாது. 

லேசாக குடிக்கும் அளவு சூடேறியதும் எடுத்து விடுங்கள். இல்லாவிடில் தேங்காய்ப்பால் திரிந்து விடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)