சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?

சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?

0
இதில் உயிர்ச் சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. 
சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?
முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். 

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்பு சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். 

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

சரி இனி முட்டைகோஸ் கொண்டு சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்:

வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் – 1 கப்

வறுத்து பொடித்த வெந்தயம் – 1\4 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

நல்லெண்ணெய் – 100 கிராம்

வெல்லம் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கோஸ் தொக்கு செய்வது
கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். இதில் மிளகாய்த் தூள் சேர்த்து அரைத்த கோஸ் விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும். ஒரு பெரிய வெங்காய த்தைப் பொடியாக நறுக்கி, வதக்கி அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் இன்னும் அமோகமாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)