நத்தை கறி ருசி எப்படிப்பட்டது?





நத்தை கறி ருசி எப்படிப்பட்டது?

0

நத்தைகள் மெத்தென்று இருக்க கூடியவை. அவ்வபோது ஓட்டுக்குள் அடைந்து விடும் நத்தையை பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கே. 

நத்தை கறி ருசி எப்படிப்பட்டது?
இதை போய் யாராவது சமைத்து சாப்பிடுவார்களா என்று கேட்கலாம். ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் நத்தையை ரசித்து ருசித்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.

எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதற்கே நன்றாக இருக்கும் என்கிறார்கள் நத்தை பிரியர்கள். இது புதிதாக இன்றைய தலைமுறைகள் சாப்பிட பழகியதல்ல. காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை சாப்பிடுகிறார்கள். 

கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள்.

நத்தை பல ஆண்டுகளாக இந்தியர்களின் உணவுப் பழகக்த்தில் சிறப்பான இடம் பிடித்த உணவாகவே இருந்த போதும். பெரும் பாலானவர்களால் அது உண்ணப்பட வில்லை என்பதே நிஜம். 

இன்றும் கூட அசைவ உணவகங்களில் நத்தை வழக்கமான உணவு இல்லை. நட்சத்திர விடுதிகளில் மட்டுமே கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சில இடங்களில் நத்தை சமைத்து தரப்படுகிறது.

மற்றபடி ஆடு, வாத்து, கோழி, மீன், இறால், மாட்டுக்கறி போல இது வழக்கமான அசைவ உணவு வகைகளில் ஒன்றாக இல்லை.
நத்தை கறியின் ருசி எப்படி இருக்கும்? என்று இணையத்தில் தேடினால் அது சுவையில் ஆயிஸ்டர் ( முத்துச்சிப்பி) ஸ்கைலாப், லாப்ஸ்டர், இறால்
போன்ற சுவைகளில் இருக்கும் எனப் பலரும் பல விதமாகக் கருத்துக் கூறி இருக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)