ருசியான நத்தை கிரேவி செய்வது எப்படி?





ருசியான நத்தை கிரேவி செய்வது எப்படி?

0

நத்தையை மூன்று நாட்கள் உயிருடன் வைத்து அதன் குடல் பகுதியில் இருக்கும் நச்சை வெளியேற்றி விட வேண்டும். 

ருசியான நத்தை கிரேவி செய்வது எப்படி?
பிறகு அதை வெந்நீர் கொதிக்க வைத்து அதில் சேர்த்து அரை மணி நேரம் விட்டு வடிகட்டினால் நத்தை இறந்து விடும்.
இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

இப்போது ஓட்டு பகுதியிலிருந்து சதைப் பகுதியை குத்தி எடுத்தால் அது சுலபமாக வெளியே வரும். 

இப்போது இதை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஐந்து முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். 

இப்போது நத்தை சமைப்பதற்கு தயாராக உள்ளது. நத்தை கிரேவி தயாரிப்பு முறை குறித்து பார்க்கலாம்.

வித்தியாசமாக கத்திரிக்காய் இடியாப்பம் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்

நத்தை - அரை கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை  டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 1  டீஸ்பூன்,

ப.மிளகாய் - 3

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

தேங்காய் விழுது - கால் கப்

கொத்த மல்லி - தேவையான அளவு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

ருசியான நத்தை கிரேவி செய்வது எப்படி?

நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். 

வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். 

பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.

வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்?

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும். 

இனிப்பில் இருக்கும் அபாயம் என்ன?

கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்து மல்லித் தளை தூவி இறக்கவும். இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)