எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?

எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?

முள்ளும் இல்லாமல், முதுகெலும்பும் இல்லாமல் ஒரு மீன் இருக்குமானால், அதுதான் கணவாய் மீன்கள். இதற்கு கடம்பா மீன்கள் என்றும் சொல்வார்கள். ஏகப்பட்ட நன்மைகளை தரக்கூடியது இந்த மீன். 
எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?
squid fish என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கணவாய் மீன்களிலேயே பல வகைகள் இருக்கின்றனவாம்.. பார்ப்பதற்கு ஆப்டோபஸ் போலவே இருக்கும்.. இந்த மீனின் கண்களே பெரிய சைஸில் இருக்கும். 

இதன் பற்களை பார்த்தால், ரம்பம் போல இருக்கும். உதடுகளை பார்த்தால் பலமாக இருக்கும். இதன் தலையில் 8 கைகள் இருக்கும். வாலில் 2 துடுப்புகள் இருக்கும். இதனுடைய தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கிறதாம். 
எதிரிகள் தன்னை நோக்கி வந்தால், உடனே அந்த சுரப்பியிலிருந்து கருப்பு கலரில் ஒரு திரவத்தை திடீரென வெளியேற்றி விடும். இதனால், சுற்றியுள்ள பகுதிகள் மொத்தமும் கருப்பாக மாறிவிடும். 

அதற்கு பிறகு ஓடிப்போய் பாறைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். அதேபோல, எதிரிகளிடமிருந்து தப்பிக்க, உடலின் தோல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதன் சதைகளும் பார்ப்பதற்கு மிக லேசாக இருக்கும். 

மீனவர்கள் வலையை போட்டு பிடித்தாலே, இந்த சதைகள் சிதைந்து விடுமாம். அதனால் தான், எப்போதுமே, தூண்டிலை போட்டு, மீனவர்கள் இந்த கணவாயை பிடிப்பார்களாம். 
வெளி மாநிலங்களிலும் இந்த மீனுக்கு நல்ல கிராக்கி உள்ளது. சரி இனி கணவாய் மீன் பயன்படுத்தி எளிமையான கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருள்கள் :

கணவாய் - கால் கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 8 பற்கள்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய்

சோம்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை
செய்முறை:
கணவாய் மீன் கிரேவி செய்வது எப்படி?ி
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள வற்றைத் தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். அத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைந்ததும் தூள் வகைகளைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்த வுடன் சுத்தம் செய்த கணவாய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும். எளிதில் தயாரிக்கக் கூடிய கணவாய் கிரேவி தயார்.
Tags: