நாவல்பழ மில்க்‌ஷேக் செய்வது | Milkshake Novel Recipe !





நாவல்பழ மில்க்‌ஷேக் செய்வது | Milkshake Novel Recipe !

0
குழந்தைகளு க்கு வெயில் காலத்தில் வித்தியாசமான, சுவையான, ஆரோக்கிய மான மில்க்‌ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் நாவல்பழ மில்க்‌ஷேக் செய்து கொடுக்கலாம்.
நாவல்பழ மில்க்‌ஷேக் செய்வது

தேவையான பொருட்கள் :

நாவல் பழக்கூழ் – அரை கப்

குளிர்ந்த பால் – தேவையான அளவு (காய்ச்சி ஆற வைத்தது)

தூளாக்கிய ஐஸ் கட்டிகள் – சிறிதளவு

விருப்பமான ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்

சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள் ஸ்பூன்

கோகோ சிரப் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

குளிர்ந்த பாலுடன் நாவல் பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும். 
இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)