சுவையான பிரெட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி?

சுவையான பிரெட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி?

0

வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளி விடும். 

பிரெட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி?
வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது. முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். 

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

உடல் சூட்டைக் குறைக்க வல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்து விடும். 

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. 

ருசியான இன்ஸ்டண்ட் பால் கோவா செய்வது எப்படி?

இந்த வெங்காயத்தை பிரெட்டுடன் சேர்த்து பிரெட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10

நீளமாக நறுக்கிய

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்த மல்லித்தழை - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பிரெட் ஆனியன் பொடிமாஸ்

பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். 

இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். 

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

இறுதியாக எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)