மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்ள !

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்ள !

0

மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவை தான். 

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்ள !
ஆனால் யாரும் எதிர் பார்க்காத வகையில் மல்லிகைப் பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன. 

குடற்புழுக்களை அழிப்பதற்கு

குடற்புழுக்களை அழிப்பதற்கு

நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். 

இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். 

அதைப் போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கும். வாய்ப் புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.

பால்வினை நோய்

பால்வினை நோய்

பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். 

குழந்தையில்லாத தம்பதிகள் மல்லிகை தோட்டத்தில் உலாவி வந்தால் அதன் நறுமணம் மூலம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தை பெறும் வாய்ப்புகளை பெறுவார்களாம்.

மல்லிகை தோட்டத்தில் தான் ரதியும் மன்மதனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே தம்பதி அன்யோன்யம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

நரம்புகள் தளர்ச்சி

நரம்புகள் தளர்ச்சி

நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது , சத்தான உணவு உண்ணாமல் இருப்பது போன்றவற்றினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இவர்களுக்கு மல்லிகைப்பூக்களை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

பெண்களுக்கு கருப்பைப் பிரச்னைகள், கருப்பை வலுபெறவும் மல்லிகைப் பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம். மாதவிடாய் சீராக வருவதற்கும் மல்லிகைப் பூ உதவும்.

பார்வை தெரிய

பார்வை தெரிய

மல்லிகைப்பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைப் பனங்கற்கண்டுடன் பருகி வந்தால் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெரிய ஆரம்பிக்குமாம்.

சுகப்பிரசவத்திற்கு

சுகப்பிரசவத்திற்கு

புத்துணர்வு பெறுவார்கள்.மல்லிகைப்பூவை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்பு குடித்து வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும். 

மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெயானது கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.

அது போலவே கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக் கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.

ஆழ்ந்த தூக்கம்

ஆழ்ந்த தூக்கம்

மல்லிகை எண்ணெய்யின் மணம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம். ஆழ்ந்த தூக்கத்தையும் வரவழைக்கும். 

எனவே தூங்கும் முன் கொஞ்சம் கைகளிலோ அல்லது மல்லிகை எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து அந்த வாசனையை வீடு முழுவதும் பரப்பினால் நன்மைகள் கிடைக்கும். 

மல்லிகைப் பூக்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பிரச்னைகளும் வராதாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மல்லிகைப் பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப் பூக்கள் உதவி செய்கின்றன. மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. 

உங்களுக்கு விருப்பமான அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இது போன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது தான் மல்லிகை பூ.

மல்லிகை பூ எண்ணெய்

மல்லிகை பூ எண்ணெய்

மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு  அருமருந்தாக உள்ளது. 

அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். 

உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி  நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)