வறுத்தரைத்த சிக்கன், டோஃபு குழம்பு செய்வது எப்படி?

வறுத்தரைத்த சிக்கன், டோஃபு குழம்பு செய்வது எப்படி?

சிக்கனில் பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. மேலும் இதில் மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலியைப் போக்குகிறது. 
சிக்கன், டோஃபு  குழம்பு
இதிலுள்ள ஜிங்க் சத்து, ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சியில் குறைந்த கொழுப்பு உள்ளது. 

சிக்கனில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு சிக்கன் சூப் மற்றும் க்ரில் செய்யப்பட்ட சிக்கன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
உடல் எடையை குறைக்க வாரத்திற்கு இரண்டு முறை 100 கிராம் கோழிக்கறி சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. 

தேவையானவை:
சிக்கன் _ 2 chicken thighs அல்லது 1 chicken breast

டோஃபு - 1/3 பங்கு

சின்ன வெங்காயம் - சுமார் 10

தக்காளி - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 3 பற்கள்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்து மல்லி , புதினா - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு.
வறுத்தரைக்க:

கொத்து மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

மிளகு - 2 லிருந்து 5 க்குள்

சீரகம் - சிறிது

பெருஞ் சீரகம் - சிறிது

மஞ்சள் - ஒரு சிறு துண்டு

கசகசா - ஒரு டீஸ்பூன்

தேங்காய் பூ - ஒரு டேபிள் ஸ்பூன் (விருப்பமானால்)

தாளிக்க:

நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

கிராம்பு - 2

பிரிஞ்சி இலை - 1

சீரகம்

பெருஞ்சீரகம்

முந்திரி
பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறுசிறு துண்டு களாக்கிக் கழுவி விட்டு, அதனுடன் சிறிது தயிர், மஞ்சள் தூள், சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டி யவற்றை வெறும் வாணலி யில் நன்றாக அதே சமயம் கருகாமல் வறுத்துக் கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து இஞ்சி, பூண்டு தட்டிக் கொண்டு, வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து விட்டு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி,பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கி யதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வதங்கியதும் அதனுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து வதக்கவும். 

சிக்கன், டோஃபு  குழம்பு செய்வது
மசாலா வின் பச்சை வாசனை போன பிறகு, தேவை யான தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

இப்போது டோஃபுவை விருப்ப மான வடிவ த்தில் நறுக்கிக் கொண்டு ஒரு non stick pan ல் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு டோஃபுவின் எல்லா பக்கங் களும் சிவக்கு மாறு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பி த்ததும் டோஃபுவையும் சேர்த்து கிளறி விடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நன்றாகக் கொதித்து வ‌ந்ததும் எலுமிச்சை சாறு விட்டு கிளறி, கொத்து மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி - Vitamin D !
இது சாதம், சப்பாத்தி, நாண், பரோட்டா, இடியாப்பம் இவறிற்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு:
சாம்பார், குழம்பு, அசைவம் இவை செய்யும் போது மிளகாய்த் தூள் போட்டு செய்வதை விட மிளகாய்த் தூளில் சேர்க்கப் படும் பொருள் களை வறுத் தரைத்து செய்யும் போது சுவையும், மணமும் கூடுத லாக இருக்கும். 

இந்தக் குழம்பை வெறும் சிக்கனிலோ அல்லது வெறும் டோஃபுவிலோ அல்லது காய்கறி களிலோ கூட செய்து கொள்ள லாம்.
Tags: