ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?





ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

வயதானவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாதத்தை செய்து சாப்பிடலாம். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெற்றிலை சாதம்
தேவையான பொருட்கள் : 
வயிறு செய்யும் வேலைகள் என்ன?
வெற்றிலை - 4, 

சின்ன வெங்காயம் - 6, 

பூண்டு - 2 பல், 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 

கடுகு - அரை டீஸ்பூன், 

மிளகு - அரை டீஸ்பூன், 

சீரகம் - அரை டீஸ்பூன், 

சாதம் - ஒரு கப், 

எலுமிச்சம் பழம் - பாதி மூடி 

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 
செய்முறை : 
வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம்,  மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான வெற்றிலை சாதம் ரெடி. இந்த சாதம் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
Tags: