குழந்தைகளுக்கு சுவையான சேமியா பகளாபாத் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு சுவையான சேமியா பகளாபாத் செய்வது எப்படி?

0

அவசர அவசரமாக காலையில் உணவை சமைத்து விட்டு வேலைக்கு செல்வோருக்கான அட்டகாசமான ரெசிபி தான் இந்த சேமியா பகளாபாத். இது ஒன் பாட் மீல் என்பதால் இதனை மிக எளிதாக செய்து விடலாம். 

குழந்தைகளுக்கு சுவையான சேமியா பகளாபாத்
இந்த சேமியா பகளாபாத் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. அதே சமயம் ருசியும் படுதூளாக இருக்கும். சேமியா உப்புமா என்றாலே அலறி ஓடுபவர்கள் கூட இந்த மாதிரி பகளாபாத் செய்து தரும் பொழுது விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். 

மேலும் வீட்டில் அரிசி காலி ஆகி விட்டால் கூட இந்த சேமியா புலாவ் ரெசிபியை தாராளமாக நீங்கள் மதிய உணவிற்கு கூட தயாரித்து சாப்பிடலாம். 

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா பகளாபாத் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

மாலை நேரத்துக்கான எளிய ஸ்நாக்ஸ் என்பதுடன், விருந்துகளிலும் சுவை கூட்டும் அயிட்டம் இது. சுவையான இந்த சேமியா புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையானவை:  

சேமியா - கால் கப், 

பச்சை மிளகாய் - 1, 

தயிர் (கடைந்தது) - ஒன்றரை கப், 

இஞ்சி - 1 கொட்டைப் பாக்கு அளவு.

சின்ன வெங்காயம் - 6, 

உப்பு - தேவைக்கேற்ப, 

தாளிக்க:  

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 

கடுகு - அரை டீஸ்பூன், 

பெருங்காயம் - 1 சிட்டிகை, 

காய்ந்த மிளகாய் - 1, 

வறுத்த முந்திரி - 3, 

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, 

மல்லித்தழை (இலைகள் மட்டும் பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்.

செய்முறை:  

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சேமியாவைக் கொட்டி, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரை வடிக்க வேண்டாம்). 

வெங்காயத்தைப் பொடியாக, பச்சை மிளகாயை சிறு வட்ட வளையங்களாக நறுக்கவும். 

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, துருவிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, முந்திரிப் பருப்புடன் சேமியா கஞ்சியில் ஊற்றவும். 

பின் கடைந்த தயிரை அத்துடன் கலந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். சூடான சேமியா பகளாபாத் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)