சுவையான மாதுளை முத்து தயிர் பச்சடி செய்வது எப்படி?

சுவையான மாதுளை முத்து தயிர் பச்சடி செய்வது எப்படி?

0

மாதுளையைப் `பழங்களின் ராணி’ என்கிறார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன என்பது தான் அதற்குக் காரணம். 

சுவையான மாதுளை முத்து தயிர் பச்சடி செய்வது

மாதுளை உடலுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய பழங்களில் ஒன்று. ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது என்பது நமக்குத் தெரியும். இவைகளில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம்.  

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு பாருங்கள் உடம்புக்கு சக்தி கிடைச்ச மாதிரி இருக்கும். 

பார்பதற்கு அழகாக சிவப்பு முத்துக்கள் காணப்படும் இந்த பழம் அழகில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தலை சிறந்தது. 

இதன் தோலை உலர்த்தி வெயிலில் காய வைத்து பொடியாக்கி உங்க சருமத்திற்கு பயன்படுத்தலாம். 

இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, இரும்புச் சத்து, மக்னீசியம், நார்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 

இத்தகைய சத்துக்கள் அடங்கிய மாதுளம் பழத்தில் இருந்து சுவையான மாதுளை முத்து தயிர் பச்சடி செய்வதை பற்றி இங்கு காணலாம்.

தேவையானவை:  

மாதுளை முத்துக்கள் - 1 கப், 

தயிர் - ஒன்றரை கப், 

பெரிய வெங்காயம் சிறியதாக - 1, 

பச்சை மிளகாய் - 2, 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:  

மாதுளை முத்து தயிர் பச்சடி

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்து விடவும். 

சிறிது நேரம் கழித்து, அதில் தயிரை கலக்கவும். பரிமாறப்போகும் நேரத்தில் மாதுளை முத்துக்களையும் கலந்து பரிமாறவும். 

கண்ணைக் கவரும் நிறத்தில், பிரமாதமான சுவை கொண்ட தயிர் பச்சடி இது. செட்டி நாட்டுக் கல்யாண விருந்துகளில் பிரபலமானது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)