சுவையான சீரக புலாவ் செய்வது எப்படி?





சுவையான சீரக புலாவ் செய்வது எப்படி?

0

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. 

சுவையான சீரக புலாவ்

ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. 

இந்த பழமையான உணவு வகை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்ததாக ஒரு சாராரும், 

மற்றொரு சாரார் இவை பண்டைய கால இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல Turkey, Greek, Persia, 

மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் இன்று சீரக புலாவ் எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:  

பாசுமதி அரிசி - 2 கப், 

முந்திரி - 10, 

பச்சை மிளகாய் - 2, 

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:  

சீரகம் - 1 டீஸ்பூன், 

பட்டை - 1 துண்டு, 

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

பாசுமதி அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து, உதிராக வடித்து ஆறவிடுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். 

அடிகனமான வாணலியில் நெய்யைக் காய வைத்து, சீரகம், பட்டை தாளித்து முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறுங்கள். 

முந்திரி சற்று நிறம் மாறியதும், வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். விரைவாக செய்யக் கூடிய, வயிற்றுக்கு இதமான புலாவ் இது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)