பர்மா உணவு அத்தோ செய்வது எப்படி?





பர்மா உணவு அத்தோ செய்வது எப்படி?

0

பர்மா உணவுகள் சென்னைக்கு வந்து முக்கால் நூற்றாண்டு ஆகி விட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சென்னைக்கு அகதிகளாக பல்லாயிரம் தமிழர்கள் வந்தார்கள்.

பர்மா உணவு அத்தோ
அதில் தமிழரை மணந்த பர்மியரும் இருந்தனர். அவர்களுக்கு சென்னை இரண்டாவது கடற்கரைச் சாலையை ஒட்டி கடைகள் அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு.

அந்த கடைக்காரர்களின் தேவைக்காக அதே பகுதியில் பாரம்பரிய பர்மா உணவகங்களும் ஏற்பட்டன. 

இப்படி தமிழகத்தில் வளர்ந்தது தான் பர்மா உணவு அந்த வகையில் இன்று பர்மா உணவு அத்தோ எப்படி? செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 3

பொடியாக நறுக்கிய பூண்டு -10 பல்

வேக வைத்த நூடுல்ஸ் - 200 கிராம் பொடியாக நறுக்கிய

முட்டைகோஸ் - ஒரு கப்

துருவிய கேரட் - கால் கப்

புளி - கொட்டை பாக்கு அளவு

காய்ந்த மிளகாய் - 10

வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

வேக வைத்த முட்டை - 2

தட்டு வடை - 4

மிளகாய்த்தூள் - சிறிது

பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - சிறிது

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

ஒரு கடாயில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை வறுத்து நன்கு பொடிக்கவும். அதே கடாயில் காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். 

புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். தேவையான அளவு உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ளதில் முக்கால் அளவு வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

அதே கடாயில் பூண்டை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்துக் கொதித்ததும் சிறிதளவு உப்பு, 

ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நூடுல்ஸை அதில் போட்டு சரியான பதத்தில் வேகவைத்து எடுத்து வடித்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், மீதமுள்ள வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்து வடிகட்டிய நூடுல்ஸ், பொடித்த வேர்க்கடலை- 

பொட்டுக்கடலை பொடி, காய்ந்த மிளகாய்ப் பொடி, புளித்தண்ணீர் சிறிது, உப்பு கலந்த தண்ணீர் சிறிது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 

பின்பு அதில் தட்டு வடைகளைச் சிறிது சிறிதாக உடைத்துப் போடவும். வெங்காயம், பூண்டைப் பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை 2 டீஸ்பூன் ஊற்றி, பின் அதை நன்கு கலக்கவும். 

மல்லித் தழையை தூவவும். வேக வைத்த முட்டையை லேசாகக் கீறி, அதற்குள் பொரித்த வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறிது வைத்து, சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சிட்டிகை தூவி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)