குழந்தைகளுக்கு வாழைப்பழ பாயாசம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு வாழைப்பழ பாயாசம் செய்வது எப்படி?

0

வாழைப்பழத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது இதயத்திற்கும் நன்மை பயக்கிறது. அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் பயனுள்ளதாக இருக்கிறது. 

வாழைப்பழ பாயாசம்

வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இரைப்பையின் அமிலத் தன்மையைக் (acidity) குறைத்து நிவாரணம் பெற முடிகிறது.

தேவையானவை:  

பழுத்த பூவன் வாழைப்பழம் - 2, 

பால் - 2 கப், 

சர்க்கரை - கால் கப், 

மில்க்மெய்ட் - கால் கப், 

ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்.

செய்முறை:  

வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும். 

அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப் பழத்தை சேர்த்து சர்க்கரையைப் போடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஏலக்காய்த்தூள், மில்க் மெய்ட் சேர்த்து இறக்கவும். 

வாழைப்பழம் விரும்பாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவர். சர்க்கரை பிடிக்காதவர்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)