புளியோதரை இடியாப்பம் செய்வது எப்படி?





புளியோதரை இடியாப்பம் செய்வது எப்படி?

0

புளியோதரை என்பது ஒரு பாரம்பரிய அரிசி உணவாகும். அரிசி சாதம் சில கலவையுடன் கலந்து இது தயாரிக்கப் படுகிறது. 

புளியோதரை இடியாப்பம்

இது கர்நாடகாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டிலும் பரவலாக புளியோதரை வழக்கத்தில் உள்ளது. கோவில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. 

சுட சுட, நெய் மணக்க மணக்க இருக்கும் புளியோதரை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி சாப்பிடலாம் என்று தான் பலரும் நினைப்பார்கள். சிலர், தயங்காமல் போய் வரிசையில் நின்று வாங்கியும் சாப்பிடுவார்கள். 

வீடுகளில் செய்யும் புளியோதரை கூட கோவிலில் தரும் சுவையில் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். 

அந்த அளவுக்கு புளியோதரை பிரியர்கள் நம் ஊரில் அதிகம். அது மட்டுமில்லை லஞ்ச் பாக்ஸ் ஈஸி ரெசிபியாகவும் இந்த புளியோதரை உள்ளது. 

சரி இனி புளியோதரை  பயன்படுத்தி புளியோதரை இடியாப்பம் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

இட்லி அரிசி - 250 கிராம், 

காய்ந்த மிளகாய் - 7, 

தனியா - 2 டீஸ்பூன், 

கடலைப் பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், 

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், 

விரலி மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), 

நல்லெண்ணெய் (புளிக்காய்ச்சலுக்கு) - 100 மில்லி, 

பொடித்த வெல்லம் - சிறிதளவு, 

புளி - 50 கிராம், 

வறுத்த வேர்க்கடலை - 25 கிராம், 

கறி வேப்பிலை - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

இடியாப்பத்தை, பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப் பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும். 

வெறும் வாணலியில் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய், தனியா, மஞ்சள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு தாளித்து, 5 காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடலைப் பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். 

புளியை தேவையான தண்ணீர் விட்டு கரைத்து சேர்த்து, உப்பு சேர்த்து, கொதிக்க விடவும். 

வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து, வெல்லம் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கினால்.. புளிக்காய்ச்சல் தயார்.

இடியாப்பத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: 

கடைகளில் கிடைக்கும் புளியோதரை மிக்ஸ், புளியோதரைப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)