சுவையான அங்குரா பூந்தி செய்வது எப்படி?





சுவையான அங்குரா பூந்தி செய்வது எப்படி?

0

பூந்தி மிகப் பிரபலமான இனிப்பு வகைகளுள் ஒன்று. தீபாவளி பலகாரங்களில் பூந்தி கட்டாயம் இடம் பெறும்.

அங்குரா பூந்தி செய்வது எப்படி?

பூப்போல மெத் மெத் என்று இருக்கும் பூந்தி இனிப்பு பிரியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனி என்பதில் ஐயம் இல்லை.

வாயில் பல் இல்லாத வயதானவர்களின் முதல் தேர்வு பூந்திதான். இனி சுவையான பூந்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

முழு உளுந்து - அரை கிண்ணம்

மைதா மாவு, கடலை மாவு - 1 கிண்ணம்

மூன்று வகையான கலர்கள் - சிறிது

ஏலக்காய்ப் பொடி  - தேவைகேற்ப

செய்முறை:  

உளுந்தை தண்ணீரில்  ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில்  மைய  அரைத்துக் கொள்ளவும்.  இதனுடன்  மைதா, கடலை மாவைச் சேர்த்துக் கிளறவும். 

பிறகு இந்த மாவை  மூன்று  சமபங்குகளாக,  மூன்று பாத்திரத்தில் பிரித்து  எடுத்து, ஒவ்வொன்றிலும்  ஒவ்வொரு ஃபுட்  கலரை சேர்த்து,  கலந்து கொள்ளவும்.

அடி கணமான வாணலியில்  சர்க்கரையைப்  போட்டு, அது மூழ்கும் அளவுக்கு  தண்ணீர்  ஊற்றி,  கெட்டிப் பாகு காய்ச்சி  ஏலக்காய்ப் பொடி  சேர்த்து  கலந்து வைக்கவும். 

மற்றொரு வாணலியில்  எண்ணெய் விட்டு  சூடானதும்,  பூந்தி  கரண்டியை  அதன் மேல் தூக்கி வைத்து,  கலந்து வைத்துள்ள  ஒவ்வொரு  கலர் மாவையும், 

தனித் தனியாக  ஊற்றி,  வாணலி கொள்ளும்  அளவு  தேய்த்து,  நன்றாக ஊறியதும்  எடுத்து,  அகலமான பாத்திரத்தில்  கொட்டி ஆற  வைத்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)