சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகி விடும். அப்படியில்லை யென்றால் எண்ணெயில் பிரிந்து போய் விடும்.
இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் அவ்வளவு சாஃப்டாக, ஒரு கோதுமை அப்பம் எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
குழந்தைகளுக்கு சட்டுனு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நாவிற்கு சுவையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி இது.
தேவையானவை :
கோதுமை மாவு - அரை கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையானயளவு
வெல்லத் துருவல் - கால் கிண்ணம்
செய்முறை
மேற்காணும் பொருள்களில் எண்ணெய்யைத் தவிர, மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, திக்காகக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஊற்றி, சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து, எண்ணெய்யில் அப்பமாக ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் மறு புறமும் திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.