குழந்தைப்பேறு என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு இது மிகவும் சிக்கலான ஒன்று.
ஆயுர்வேதத்தில் மூலிகை பயன்பாட்டிற்கு பஞ்சமில்லை. எல்லா வித நோய்களுக்கான சிகிச்சைகளில் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உடலில் தேவையற்ற உடல் பாகங்கள்
அந்த வகையில் நெருஞ்சி என்பது ஒரு முட்பூண்டு வகை செடியாகும். இது பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்த மூலிகை செடி பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன.
மேலும் சரும கோளாறுகள், முடி உதிர்வு, மாதவிடாய் வலிகளைக் குறைப்பது, தலைவலியைக் குறைப்பது என்று பல்வேறு வகையில் மனித இனத்திற்கு உதவுகிறது.
உடல் வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த சைவ உணவுகள் !
நெருஞ்சிலானது மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடியாகும். இந்தத் தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும்.
மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.நெருஞ்சியின் சிறப்பை அறிந்து கொள்ள இந்த பதிவைத் படியுங்கள்.
இதயம் தொடர்பான பிரச்சனை
சிறுநீரகம் மட்டுமில்லாமல் இதயமும் ஆரோக்கியமுடன் செயல்பட நெருஞ்சி உதவுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு நெருஞ்சியை எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் ஆரோக்கியமான இதய செயல்பாடுகளுடன் வாழ்வதாக அறியப்படுகிறது.
நெருஞ்சியை உட்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் உண்டாவது குறைகிறது.
மேலும் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கவும் நெருஞ்சி உதவுகிறது.
சிறுநீரக கற்கள்
தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் நாள் கணக்கில் சேர்ந்து கற்களாக உருவாகின்றன. சிறுநீரக கற்கள் பாதிப்பிற்கு சிகிச்சை அளித்து அதனை முற்றிலும் போக்குவதற்கு நெருஞ்சி உதவுகிறது.
பிராய்லர் கோழி நல்லதா? உண்மையை விளக்கும் மருத்துவர் !
நெருஞ்சியின் வேர்கள் மற்றும் பழங்கள் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. நெருஞ்சிக்கு சிறுநீர் பிரிப்பு, குளிர்ச்சி மற்றும் லித்தோட்ரி ப்டிக் பண்புகள் உள்ளன.
அதனால் சிறுநீர்கட்டு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சார்ந்த நீர்க்கட்டி மற்றும் வாதம், பித்தம் போன்றவற்றில் உண்டாகும் தோஷங்களைப் போக்க உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க
லிபிடோ, விறைப்பு குறைபாடு போன்ற பாதிப்புள்ள ஆண்கள் தொடர்ந்து இந்த மூலிகையைப் பயன்படுத்துவதால் சிறந்த நன்மை அடையலாம்.
ஒட்டு மொத்தமாக ஆண்களின் கருவுறுதல் வளத்தை அதிகரிக்க இந்த மூலிகை பயன்படுகிறது .
கருவுறாமை பாதிப்பைப் போக்க
பெண்கள் கருவுறாமைக்கு முக்கிய காரணம் பிசிஓஎஸ் என்னும் கருப்பை நீர்கட்டிகள். இந்த பாதிப்பு உடலில் நீர் தேக்கம், க்ளுக்கோஸ் சகிப்புத் தன்மையின்மை போன்ற பாதிப்புகளை ஊக்குவிக்கிறது.
புரதம் நிறைந்த மத்தி மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !
க்ளுகோஸ் சகிப்புத் தன்மையின்மை காரணமாக நீரிழிவு பாதிப்பு உண்டாகிறது. நெருஞ்சி , உடலில் நீர் தேக்க பாதிப்பை குறைத்து கருவுறாமை பாதிப்பைக் குறைக்கிறது.
மேலும் மாதவிடாய் வலியைக் குறைத்து, மெனோபாஸ் அறிகுறிகளை எளிதாக்குகிறது.
வயது முதிர்வை தாமதப்படுத்த
உடல் சார்ந்த முதிர்ச்சியில் இந்த மூலிகை வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது.
சருமம் சார்ந்த முதிர்ச்சியில் செல் சேதங்களைத் தடுத்து சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் வயது முதிர்வு சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது.
சிறுநீர் பிரிப்பு
சிறுநீர்ப்பையை முழுவதும் சுத்தம் செய்வதன் மூலம் சிறுநீரகம் தொடர்பான நோய்களை போக்குவதில் சிறந்த பலன் அளிக்கிறது
நெருஞ்சி. சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் நெருஞ்சியின் லித்தோட்ரிபப்ட்டிக் பண்பு உதவுகிறது.
மனநலம் மேம்பட
இந்த மூலிகையைத் தொடர்ந்து உட்கொண்டு வருவதால் தலைவலி குணமாகிறது.
தினசரி அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது மற்றும் உளவியல் சார்ந்த கோளாறுகள் நிர்வகிக்கப் படுகிறது.
நெருஞ்சியை எப்படி உட்கொள்வது?
1. நெருஞ்சி பொடியை தண்ணீரில் கலந்து அந்த நீரைப் பருகலாம்.
பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?
2. நெருஞ்சி இலைகளை நீரில் கொதிக்க வைத்து பருகுவதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு குறையலாம்.
3. இரவு உறங்கச் செல்வதற்கு முன் நெருஞ்சி பொடியுடன் தேன் கலந்து உட்கொள்ளலாம். இது ஒரு எளிய வழிமுறையாகும்