ருசியான பிரட் சீஸ் பைட்ஸ் செய்வது எப்படி?

0

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கு சற்று வித்தியாசமாகவும், விரும்பி சாப்பிடும் வகையிலும் பிரட் கொண்டு அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். 

ருசியான பிரட் சீஸ் பைட்ஸ்
இந்த பிரட் சீஸ் பைட்ஸ் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். 

குறிப்பாக இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஸ்நாக்ஸ். இப்போது பிரட் சீஸ் பைட்ஸ் எப்படி செய்வதென்று காண்போம். 

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 2

பிரட் தூள் - 1/2 கப்

சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்

சீஸ் துண்டுகள் அல்லது துருவிய சீஸ்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தண்ணீர் - 1/4

செய்முறை:

முதலில் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் தேவையான சதுர சீஸ் துண்டுகளை வைக்கவும் அல்லது தேவையான அளவு துருவிய சீஸ் தூவிக் கொள்ளவும்.

தித்திப்பான பலாச்சுளை இலை அடை செய்வது எப்படி?

பின் அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும். பின்பு ஒரு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சோள மாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

பின் வெட்டி வைத்துள்ள ஒரு பிரட் துண்டை எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?

எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் சீஸ் பைட்ஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !