பிராய்லர் கோழி நல்லதா? உண்மையை விளக்கும் மருத்துவர் !

பிராய்லர் கோழி நல்லதா? உண்மையை விளக்கும் மருத்துவர் !

0

நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. 

கொழுப்பு சத்து நிறைந்த பிராய்லர் கோழி
மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி. கடந்த 10 வருடங்களாகவே பிராய்லர் கோழிகளை தொடர்ந்து சாப்பிடலாமா என்னும் கேள்வி பலருக்கும் உண்டு. 

புரதம் நிறைந்தது கோழி இறைச்சி என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் அதை வளர்க்கும் முறையிலும் பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும். 

இல்லையெனில் அவை உடலுக்கு நன்மை செய்வதில் குறைகள் உண்டாகலாம். இளம் வயதில் பெண் குழந்தைகள் பூப்படைந்து வருவதற்கு காரணங்களாக உணவு முறையும் சொல்லப்படுகிறது. 

ஒருவர் உண்பதால் சந்ததியே பலியாகும் - மலிவு என்று இந்த மீனை வாங்கிடாதீங்க !

அத்தகைய உணவு வகைகளில் உரிய முறையில் வளர்க்கப்படாத கோழி இறைச்சியும் ஒரு காரணம். உலகம் முழுக்க அசைவ பிரியர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். 

சுத்தமான அசைவம் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். 

அதே போன்று அன்றாடம் இறைச்சி வகைகளை அதிகம் எடுத்து கொள்பவர்களில் பலராலும் ஆரோக்கியமாக திடகாத்திரமாகத் தான் இருக்கிறோம் என்று சொல்ல முடிவதில்லை.

மூலிகை தாவரத்தையும், மருந்து இலைகளையும் தின்று வளர்ந்த ஆடுகள் இன்று சத்தில்லாமல் சக்கையை உண்டு கொழுத்திருக்கின்றன. 

இதற்கு சற்றும் சளைக்காமல் தானியங்களைத் தின்று மட்டுமே வளர்ந்த கோழிகள் சில குப்பை மேட்டில் மேய்ந்திருந்தாலும், சில கோழிகள் வீட்டுப் பராமரிப்பில் திடகாத்திரமாக இருக்கின்றன எனினும் இவற்றை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.

கோழிகள் வீட்டுப் பராமரிப்பில்

இந்நிலையில் பிராய்லர் கோழி எனப்படும் கோழி இறைச்சிக்கு அசைவப் பிரியர்கள் அனைவருமே அடிமையாகிக் கிடக்கிறார்கள். சமீப காலங்களாக மருத்துவர்கள் இராசயனங்கள் கலக்கப்பட்டு விளையும் உணவு பொருள்களை போன்று, 

கால் நடை வளர்ப்பிலும் வீரியம் கலந்த ஆன்டி பயாடிக் மருந்துகள் சேர்க்கப்படும் இறைச்சி வகைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவை அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.

சிறந்த கோழி பண்ணைகள் அரசு விதித்திருக்கும் நடைமுறைகளை பின்பற்றினாலும் இதிலும் சிலர் விதிமுறைகளை மீறுவதை தவிர்க்க இயலுவதில்லை.

தரையில் ஊர்ந்து செல்லும் அதிசய விரால் மீன் - அலறும் அமெரிக்கா !

ஒரு புறம் அசைவம் உடலுக்கு சேர வேண்டும். அதிலும் புரதம் நிறைந்த கோழி இறைச்சி அவசியம் தேவை என்பதும் மறுக்க முடியாது. அதே நேரம் உண்ணும் கோழி உரிய முறையில் வளர்க்கப் பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதோடு பிராய்லர் கோழிக்கு தீவனம் இடுவதிலும் இந்திய உணவு தர நிர்ணயம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மட்டுமே ஆன்டி பயாடிக் சேர்க்கை இருக்க வேண்டும். 

இப்படி வளர்ந்து விற்பனைக்கு வரும் கோழி இறைச்சியில் கேடு இருக்காது.

சுவையைக் கூட்டும் தயாரிப்பு

சுவையைக் கூட்டும் தயாரிப்பு

அசைவப் பிரியர்களில் அதிகமானோர் கோழி இறைச்சியை விரும்ப காரணம் இதன் சுவை தான். 

அதே நேரம் எண்ணெயில் பொறித்து கலர் கலராய் வண்ணம் சேர்த்து, செயற்கை சுவையூட்டிகளும், காரமிக்க அதீத மசாலாக்களும் சேர்த்த இவை நிச்சயம் உடலுக்கு நல்லதை மட்டுமே தருமா என்பதும் கேள்விக்குறி தான்.

நாட்டுக் கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது. இதில் புரத சத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. 

நாட்டுக்கோழி அளவுக்கு பெருத்த நன்மைகளை பிராய்லர் கோழியிடம் எதிர் பார்க்க முடியாது என்றாலும் அதன் வளர்ப்பிலும் குறை நேராமல் இருக்க வேண்டும்.

எப்படிச் சாப்பிடுவது தெரியுமா?

எப்படிச் சாப்பிடுவது தெரியுமா?

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளத்தில் நுழைந்து கொழுப்பை தேக்கி வைக்கிறது. இவை அடைப்பை உருவாக்கும் போது இரத்த அழுத்தம், இரத்தத்தில் மிகுதியான கெட்ட கொழுப்பு சேர்கிறது.

விரைவில் பூப்படையும் பெண் குழந்தைகள் சுவைக்கூட்டி தயாரிக்கப்படும் மிருதுவான சிக்கனின் ருசியில் மயங்கி கிடக்கிறார்கள். 

நான் 7 மாச கர்ப்பம் அதனால் தான் இப்படி - அதிர்ந்த போலீஸ் !

பெண் குழந்தைகள். இதனால்  விரைவில் உடல் பருமனையும் சந்திக்கிறார்கள். இந்த அதீத உடல் பருமனால் 8 வயது நிரம்பாத பெண் குழந்தைகளும் விரைவிலேயே பூப்படையும் நிலையை அடைகிறார்கள். 

அதன் பிறகு மாதவிடாயிலும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க கோழி இறைச்சியே காரணம் இல்லை என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமே என்று சொல்லலாம்.

21 ஆம் நூற்றாண்டில் சுகாதார வளர்ச்சியில் மிகப்பெரும் சவாலாக பெரும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய முக்கிய பிரச்சனைகளாக சொல்லப் படுவது ஆன்டி மைக்ரோபியல் எதிர்ப்பு (AMR).

ஆன்டி பயாடிக் 

பிராய்லர் கோழி உண்மையை விளக்கும் மருத்துவர்

முதலில் ஆன்டி பயாடிக் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம். மனிதர்களிடமும், விலங்குகளிடமும் பாக்டீரியாவில் தொற்று நோய்கள் உண்டாகும் போது இதை தடுக்க உதவுவதே ஆன்டி பயாடிக் என்று சொல்கிறோம். 

இந்த ஆன்டி பயாடிக் நுண்ணுயிர் எதிர்ப்புகளின் அதிகப்படியான பயன்பாடானது ஆன்டி பயாடிக் எதிர்ப்பு என்று அழைக்கப்படும் ஆன்டி பயாடிக் செயல் திறனை குறைத்துள்ளது.

அந்த வகையில் கடந்த 50 வருடங்களாகவே கோழி வளர்ப்பில் ஆன்டி பயாடிக் நோய்த்தொற்றுகள் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், 

ஆணுறுப்பு கடவுளை வழிபட்ட பெண்கள் - உலகின் விசித்திரமான கடவுள்கள் !

கோழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பண்ணை விலங்குகளின் உற்பத்தியை மேம்படுத்தவும் பயன்படுத்தப் படுகின்றன.

பிராய்லர் கோழி குறித்து மருத்துவர்..

பொதுவாகவே உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் ஆன்டி பயாடிக் நுண்ணுயிர் எதிர்ப்புகள் 3 விதமான காரணங்களுக்காக பயன்படுத்தப் படுகின்றன. 

பிராய்லர் கோழி

விலங்குகளுக்கு தொற்று நோய் உண்டானதற்கான அறிகுறிகளை காண்பிக்கும் போது, இரண்டாவது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான விலங்குகளின் குழுவிற்கு சிகிச்சை அளிக்கவும், 

நோய் பரவலை குறைக்கவும், தொற்று நோய் ஆபத்தில் இருக்கும் போது இதை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இறுதியாக விலங்குகளின் எடையை அதிகரிக்க வளர்ச்சி ஊக்குவிப்பாளராக பயன்படுத்தப் படுகிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் கோழி வளர்ப்பில் ஏராளமான ஆன்டி மைக்ரோபையல்களை பரவலாகவே பயன்படுத்தி வருகிறார்கள். உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த ஆன்டி பயாடிக் 1910 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களே இது போன்று உங்களுக்கும் நடக்கலாம் !

முதன் முதலில் அமெரிக்காவில் இறைச்சி பற்றாக்குறை ஒப்பீட்டின் போது மலிவான விலையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு ஆன்டி பயாடிக் பயன்படுத்தினார்கள். 

இதனால் ஆன்டி மைக்ரோபியல் பயன்பாட்டை தடைசெய்வதில் பெரிய முயற்சியை மேற்கொண்ட நாடில் முதன்மையானது ஸ்வீடன். 

கோழியில் மட்டும் தான் இந்த பிரச்சனையா என்று கேட்கலாம். இல்லை மண்ணிலும் படிந்து காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி என்று அனைத்திலும் ஆன்டி பயாடிக் நீக்கமற நிறைந்துள்ளது.

அப்படியெனில் ஒவ்வொரு உணவையும் சரியாக இருக்கா என்று பரிசோதனை செய்து சாப்பிடமுடியுமா அதுவும் குடிக்கும் நீர் முதல் என்று கேட்கலாம்.

அதனால் தான் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேண்டாம் என்று சொல்வதற்கேற்ப அனைவரும் இணைந்து அவை அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்துவதை கடமையாக கொள்ள வேண்டும்.

பிராய்லர் கோழி நல்லதா?

அதற்கு மாற்றாக தான் உலகம் முழுக்க இயற்கை விவசாயம், மூலிகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பல்வேறு தாவரங்கள், 

மூலிகைகள் மற்றும் இயற்கை உரம் என்று முன்னோர்கள் கால ஆரோக்கிய வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள் பெருமளவு மக்கள். 

பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?

இது குறித்த விழிப்புணர்வு நோக்கி அரசும் கை கோர்த்திருக்கிறது.இனி எதை சாப்பிடுவதாக இருந்தாலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள் என்று சொல்லிவிட ஆசை தான். 

ஆனால் இயற்கையை நாடத்தொடங்கி விட்டதால் இனி வரும் காலம் ஆரோக்கியமாகவே அனைவருக்கும் இருக்கும் என்று நம்புவோம்.

பரிமளா தேவி குமாரசாமி MSc.,(UK). MSc.,

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)