வெங்காயத்தாள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான கீரை !





வெங்காயத்தாள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான கீரை !

0

வெங்காயத்தாள் (Allium fistulosum) வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்த இலை மரக்கறி ஆகும். இது கிழக்காசிய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. 

வெங்காயத்தாள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை

தமிழர் சமையலில் இதை வறுக்க, சுவையூட்ட பயன்படுத்துவர். வெங்காயத்தாள்👋 நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கீரையாகும். 

வெங்காயத்தாளனது சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. 

இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும். வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில்👋 வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. 

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.

இந்த வெங்காயம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. இதை சாலட்👋 மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

நன்மைகள் ஏராளம்

வெங்காயத்தாள் நன்மைகள் ஏராளம்

இதன் தனித்துவமான சுவை உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. குறிப்பாக பிரெஞ்சு மற்றும் தெற்கு ஆசியா மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 

இதிலுள்ள ஏராளமான 👋ஊட்டச்சத்துக்களால் இது நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது, 

டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இன்னும் நிறைய உடல் நல நன்மைகளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் வெங்காயத்தில் 72 கலோரிகள் ஆற்றல் உள்ளது

16.8 கிராம் கார்போஹைட்ரேட்

3.2 கிராம் நார்ச்சத்துகள்

7.87 கிராம் சர்க்கரை

79.8 கிராம் நீர்ச்சத்து

2.5 கிராம் புரோட்டீன்

37 மில்லி கிராம் கால்சியம்

1.2 மில்லி கிராம் இரும்புச் சத்து

21 மில்லி கிராம் மக்னீசியம்

60 மில்லி கிராம் பாஸ்பரஸ்

334 மில்லி கிராம் பொட்டாசியம்

12 மில்லி கிராம் சோடியம் உள்ளது.

இரத்த ஓட்டத்தை சீராக்குதல்

இரத்த ஓட்டத்தை சீராக்கும் வெங்காயத்தாள்

வெங்காயத்தில் அதிகளவு இரும்புச் சத்து, காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் இது இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

இதனால் இரத்த ஓட்டம்👋 அதிகரிக்கிறது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. உடல் ஆற்றலுக்கும், செல்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வெங்காயத்தாள்

இந்த வெங்காயத்தில் அல்சின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால்👋 அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. 

இதில் உருவாகும் என்சைம்னான ரிடெக்டேஸ் கல்லீரலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்துக்கு வெங்காயத்தாள்

இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதால் இதயத்திற்கு நல்லது. 

ஏனெனில் கொலஸ்ட்ரால்👋 அளவு குறையும் போது பக்கவாதம், ஆந்த்ரோக்ளிரோஸஸிஸ், கரோனரி இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

இரத்த அழுத்தத்தை குறைக்கும் வெங்காயத்தாள்

வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அல்சின் ஒரு வாஸோடைலேட்டர் மாதிரி செயல்படுகிறது. இது வெளிப்படுத்தும் நைட்ரிக் ஆக்ஸைடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

பொட்டாசியம்👍 இரத்தக் குழாய்களை ரிலாக்ஸ் ஆக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்துதல்

டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்த வெங்காயத்தாள்

அல்லியம் மற்றும் அல்லில் டிஸல்பைடு, வெங்காயத்தில் காணப்படும் இரண்டு பைட்டோ கெமிக்கல் கலவைகள். 

இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்கள்👍 நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த வெங்காயத்தாள்

வெங்காயத்தில் உள்ள காமா - அமினோபியூட்டிரிக் அமிலம் ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர் மாதிரி செயல்பட்டு மூளையை👍 ரிலாக்ஸ் செய்கிறது.

அதே மாதிரி இதிலுள்ள விட்டமின்கள், மினரல்கள் மற்றும் பைரிடாக்ஸின் போன்றவைகள் நரம்புகளை அமைதிப்படுத்த மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது.

எலும்பின் அடர்த்தி

எலும்பின் அடர்த்திக்கு வெங்காயத்தாள்

வெங்காயத்தில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. 

எனவே அடிக்கடி நீங்கள் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள்👍 வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் வெங்காயம் கூந்தலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது.  

பக்க விளைவுகள்

இரத்தக் கசிவு உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது இரத்தம் கட்டுதலை தடுத்து அதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட செய்து விடும்

குறைந்த இரத்த சர்க்கரை கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது மேலும் இரத்த சர்க்கரை👍 அளவு குறைய வாய்ப்புள்ளது.

வெங்காயத்தாளின் மேலும் பல மருத்துவ பயன்கள்

வெங்காயத்தாளின் பல மருத்துவ பயன்கள்

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய்👍 மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா👋 நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு  பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.

வெங்காய தாளில் காணப்படும் விட்டமின்👍 கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெங்காயத்தாளின் மேலும் பல மருத்துவ பயன்கள்

வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை👍 வழங்குகின்றன.

வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

வெங்காய தாளானது புற்றுநோய்👍 வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)