கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரில் கண்களை  கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும். 
சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?
இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். தோலில் வெடிப்புகள் சரியாக, தனியா கஷாயம் செய்து அருந்தவும். 

ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும். 
கொத்தமல்லி விதையை மென்று உமிழ்நீரை இறக்கினால் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப்  புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.

சரி இனி கொத்தமல்லி கொண்டு சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

கோதுமை மாவு - 200 கிராம்,

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

சிறிய உருளைக் கிழங்கு - 3,

கொத்தமல்லி  - 1 கப்,

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன். 
செய்முறை:
சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேக விட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த் தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். 

இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.
கொத்த மல்லி சட்னி:

கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும். இப்போது கொத்த மல்லி சட்னி ரெடி.