மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?

மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?

0
பூஞ்சைகளை மருத்துவமாகப் பயன்படுத்தும் முறை சீனாவில் தொன்று தொட்டு பிரபலமாகவே உள்ளது. 
மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?
அப்படி சமீபத்தில் காபி விரும்பிகளுக்காக தயாரிக்கப்பட்டது தான் மஷ்ரூம் காபி.

இது காபி பிரியர்களிடம் டிரெண்டாகி இருப்பதை விட காபி அருந்தாதவர்களையும் ஈர்த்துள்ளது தான் ஆச்சரியம். 

மஷ்ரூம் காபி என்றால் என்ன ?
மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?
இது சாதாரன பிளாக் காபி போன்றது தான். ஆனால் அதில் கொஞ்சம் கூடுதலாக மஷ்ரூம் பவுடரைக் கலப்பது தான் அதன் சுவைக்குக் காரணம்.

மஷ்ரூம் என்பது பூஞ்சையாக இருந்தாலும் அதன் சுவை மற்றும் வாசமோ அதில் தெரியாது. 

அதில் பயன்படுத்தப்படும் மற்ற மூலக் கூறுகளால் அதன் ஒருவித பூஞ்சை மணம் மறைக்கப் படுகிறது.
இதனால் குடிப்பவர்களுக்கும் அது முகம் சுழிக்கும் வகையில் இருப்பதில்லை. 

அதே சமயம் இது வழக்கமான காபியைக் காட்டிலும் கஃபைன் அளவுக் குறைவாகவே இருக்கிறது.

இது கிரீன் டீ அருந்துவதற்கு இணையான பலனை அளிக்கிறது. இதை அமெரிக்க வேளாண்மை (யுஎஸ்டிஏ) தேசிய ஊட்டச்சத்து தரவுத்தளம் உறுதி செய்துள்ளது. 

அதில் இது நாம் அருந்தும் காபியைக் காட்டிலும் அதிக ஆற்றல் சக்தியை அளிக்கக் கூடியது என்றும் இதை சீனர்களும் பாரம்பரிய மாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட் டுள்ளது.

என்னென்ன நன்மைகள் உள்ளன ?
மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?
இந்த மஷ்ரூம் பவுடர் காபி அருந்துவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். 

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப் பட்டிருந்தால் அதை எதிர் கொள்ளும் ஆற்றல் மஷ்ரூம் காபியில் அதிகமாக உள்ளது. 

வயிறுக் கோளாறு தொந்தரவுகளும் இருக்காது. அதிக அளவிளான உயிர்ச் சத்துகளும், மினரல் சத்துகளும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கிறது. 
குறிப்பாக செலினியம், பொட்டாசியம், காப்பர் என உடலுக்கு மிக முக்கிய மினரல் சத்துகள் இருக்கின்றன. 

அதுவும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளின் உறுதித் தன்மைக்கு நல்லது. 

குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து இருப்பதால் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவ ர்களுகும் இது நல்ல பானமாக இருக்கும்.

எவ்வாறு பயன்படுத்துவது ?
மஷ்ரூம் காபி பலன்கள் என்ன?
காளான் பூஞ்சைகளை நன்கு காய வைத்து அதைப் பொடியாக அரைத்து சில காபிக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி 

நறுமணம் நிறைந்த பானமாகத் தயாரிக்கப்படுவது தான் இதன் சிறப்பு. இதை வீட்டிலேயும் குடிக்கலாம். 
ஆன்லைன் சந்தைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் எளிதாகவும் வாங்கக் கூடிய விலையிலும் கிடைக்கின்றன. 

அதை வாங்கி எப்போதும் போடும் பிளாக் காபி போல் ஸ்பூன் மஷ்ரூம் பவுடர் கலந்து குடித்தால் மஷ்ரூம் காபி ரெடி. 

இது சாஷே பாக்கெட்டுகளாகவும் கிடைக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)