ஆண்டி ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும் !





ஆண்டி ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும் !

உடலில் இருக்கக்கூடிய மற்ற உறுப்புகளை போலவே, சருமத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். 
ஊட்டச்சத்துக்கள்
மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆரோக்கிய உணவுகளை எப்படி தேர்வு செய்து சாப்பிடுகிறோமோ, அதே போல சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளாலும், சுற்றுப்புற சூழல் காரணமாகவும், வயது முதிர்ச்சி காரணமாகவும் சருமம் பாதிப்படையும். 

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நாம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்கள் காரணமாகவும் சருமம் பாதிப்படையும்.

ஊட்டச்சத்துக்கள்:
சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சிலவற்றை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். ஆண்டி ஆக்ஸிடண்ட், ஒமேகா-3, -6 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, சி நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.

அதே போல, ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை சாப்பிடலாம். 

கொட்டைகள் மற்றும் விதைகளில் ஃபேட்டி அமிலம் இருப்பதால் இவற்றை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகும். வைட்டமின் சியில் கொலாஜனை உற்பத்தி செய்யும் தன்மை இருக்கிறது. 

வைட்டமின் ஈ சருமத்தை சூரிய மற்றும் புற ஊதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை சரிசெய்ய உதவும். 

சருமம் பளிச்சென்று இருக்க ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பானத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.
வாழைப்பழம், அன்னாசி, ஆளி விதை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, பட்டை மற்றும் மஞ்சள் ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 
ஆண்டி ஏஜிங் ட்ரிங்க்
தேங்காய் பால் மற்றும் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. ஆளிவிதையில் ஒமேகா ஃபேட்டி அமிலம் இருப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும். 

இஞ்சி மற்றும் மஞ்சளில் ஆண்டி-ஏஜிங் தன்மை இருப்பதால் சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்க உதவும்.
முதலில் வாழைப்பழம் மற்றும் அன்னாசியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். 

ஒரு பௌலில் அதனை சேர்த்து அத்துடன் ஆளிவிதை, துருவிய இஞ்சி, தேங்காய் எண்ணெய், பட்டை தூள், மஞ்சள் தூள் மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை சேர்க்கவும். 

அதில் தேங்காய் பால் சேர்த்து ப்ளெண்டர் கொண்டு அரைத்து கொள்ளவும். அதில் உங்களுக்கு தேவையான அளவு தேன் சேர்த்து பருகலாம்.
Tags: