சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?

சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?

0
காபி ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மை பயக்கிறது மற்றும், அந்த நபரை புதியதாகவும், புத்துணர்வுடனும் வைத்திருக்கிறது. காபியின் வாசனை ஒரு நபரை வசீகரிக்கிறது. 
சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?
இதன் சுவை கசப்பானது என்றாலும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உலகம் முழுவதும் மக்கள் பெரிய அளவில் காபியை உட்கொள்கின்றனர்.  

காபி குடிப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது. தினமும் 3 முதல் 5 கோப்பைகள் வரை காபி குடிப்பது இதய நோய் ஏற்படாமல் 15% வரை தடுக்கிறது. 

காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். 

அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காபி பீன்ஸை, வறுத்து காபி விதைகள் தயாரிக்கப் படுகின்றன. காபி விதைகளின் சுவை, அதனை வறுத்த செயல்முறையைப் பொறுத்தது. 
பொதுவாக, இது மிகவும் சூடான பானமாகும், ஆனால்  இப்போதெல்லாம் மக்களிடையே  இது குளிர்ச்சியான  பானமாகவும் விரும்பப்படுகிறது. 

சரி இனி காபி பொடி கொண்டு சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :.

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 1/2 கப் 

கொதிக்கும் நீர் - 1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?
முதலில் ஒரு பௌலில் காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து, நன்கு ஸ்பூன் வைத்து, முட்டையை எப்படி அடிப்போமோ, 

அதே போல் தொடர்ந்து 5 நிமிடம், நன்கு நிறம் மாறி பேஸ்ட் ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
தூக்கமில்லாமல் அவஸ்தை படுகிறீர்களா?
இறக்கியதும், அந்த பாலை அடித்து வைத்துள்ள காபி தூளுடன் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இப்போது அந்த காபியைக் குடித்தால், அது வித்தியாச மான சுவையில் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)