சுவையான இஞ்சி புளி தொக்கு செய்வது எப்படி?





சுவையான இஞ்சி புளி தொக்கு செய்வது எப்படி?

தேவையானப்பொருட்கள்:

இஞ்சி – 50 கிராம்,

புளி – நெல்லிக்காய் அளவு,

வெல்லம் – சிறிய துண்டு,

பச்சை மிளகாய் – 3,

கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சி புளி தொக்கு
இஞ்சியைக் கழுவி, தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கவும். புளியை ஊற வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். 

இதனுடன் புளி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். 
மீண்டும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து… அரைத்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுக்கவும்.
Tags: