இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி?





இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.: 
இளம் இஞ்சி - 25 கிராம், 

பிஞ்சு பச்சை மிளகாய் - 10, 

புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் - ஒன்று, 

எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை.: 
இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு செய்வது
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு 

பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். 

மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும். 

குறிப்பு.: 

இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
Tags: