சிக்கன் தக்காளி கிரேவி செய்வது எப்படி?





சிக்கன் தக்காளி கிரேவி செய்வது எப்படி?

என்னென்ன தேவை?
எண்ணெய் - தேவையான அளவு

கசூரி மேதி இலைகள் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1.5 கப்

சிக்கன் - 1/2 கிலோ

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கிரேவிக்கு...

தக்காளி - 3 

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?
சிக்கன் தக்காளி கிரேவி
ஜாரில் தக்காளியை எடுத்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். 

இப்போது எழும்பு இல்லாத சிக்கன் துண்டுகள் எடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலந்து வைக்கவும். 
ஒரு கடாய் எடுத்து அதில் மசித்த மசாலா சேர்த்து கலந்து தடித்து வரும் வரை சமைத்து பின் சிறிது தண்ணீர் ஊற்றி எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். 

இப்போது மற்றொரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சிக்கன் சேர்த்து அவற்றை வதக்கி பின் தக்காளி கிரேவியில் அவற்றை போட்டு கலந்து சிக்கன் வேகும் வரை சமைக்கவும். 

வெந்த பின் சிறிது கசூரி மேதி இலை துவி இறக்கவும்.
Tags: