சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?





சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

0

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 

சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?
நீங்கள் உலகின் எந்தஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். 

உண்மையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உணவு கலாச்சாரங்கள் உபரி பயிர்களை ஊறுகாய்களாக தயார் செய்து உற்பத்தி செய்கின்றன.

ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை. 

அல்லாஹு  அக்பர் சொன்னது ஏன்? இந்துத்துவா மாணவர்கள் செய்தது என்ன? முஸ்கான் !

ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று என்பதால் இன்று நாம் சிக்கன் கொண்டு சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

எலும்புகள் இல்லாத சிக்கன் - 1 கிலோ

உப்பு - 7 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி

சீரகம் மற்றும் வெந்தையப் பொடி - 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1/2 கப்

முழு பூண்டு  - 1

கறிவேப்பிலை - 5 இலைகள்

சீரகம் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 8 மேசைக்கரண்டி

கடுகுப் பொடி - 2 மேசைக் கரண்டி

மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி

கரம் மசாலா பொடி - 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து வைக்கவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

தேங்காயில் பூ விழுந்தால் சாப்பிடலாமா?

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் உரித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும்.

அடுத்ததாக கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும்.

இந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறுந்தீயில் வையுங்கள். 

மசாலா நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும்.

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

தற்போது சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி. இதை எல்லா உணவுகளுக்கும் தொட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)