முப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?





முப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?

தேவையானவை.:
பாசிப்பருப்பு – 100 கிராம்

கடலைப்பருப்பு – 50 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

வெல்லம் – 200 கிராம்

தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 3

முந்திரி, திராட்சை – தேவையான அளவு

நெய் – 2 டீஸ்பூன்

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை.:
முப்பருப்பு பாயசம்
பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.
பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்.

பிறகு வேக வைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் – அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, 
இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப் பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
Tags: