தினை – கேரட் ரைஸ் செய்வது எப்படி?





தினை – கேரட் ரைஸ் செய்வது எப்படி?

தேவையானவை:
தினை – 200 கிராம்

கேரட் – 4 (துருவவும்)

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒரு கப்

பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தேவையான அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு. 
செய்முறை:
தினை – கேரட் ரைஸ்
தினையை நன்கு களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கி ஆறவிடவும்.

பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஆறிய தினை சாதம், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து 

உடையாமல் புரட்டி, நன்கு சூடேறியதும் கொத்த மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
Tags: