கேரட் பூரி செய்வது எப்படி?





கேரட் பூரி செய்வது எப்படி?

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,

துருவிய கேரட் – அரை கப்,

பச்சை மிளகாய் – 2,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
கேரட் பூரி
கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.

உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
Tags: