சேஷ்வான் சாஸ் தயாரிப்பது எப்படி?





சேஷ்வான் சாஸ் தயாரிப்பது எப்படி?

ரோட்டோர கடைகளில் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறோம். அவற்றில் இந்த சேஷ்வான் சாஸ் சேர்க்கப்படுகிறது. 
சேஷ்வான் சாஸ் தயாரிப்பது
பெரும்பாலான சைனீஷ் ரெசிபிகளில் இந்த சேஷ்வான் சாஸ் சேர்க்கப் படுகிறது. இந்த சேஷ்வான் சாஸை வீட்டிலேயே சுவையாகவும் ஆரோக்கிய மாகவும் தயாரிக்க முடியும். 
சிறிதளவு சாதம் அல்லது நூடுல்ஸ், சேஷ்வான் சாஸ், வேகவைத்த இறைச்சி, காய்கறிகள் ஆகியவை சேர்த்து ருசியான ரெசிபியை தயாரிக்க முடியும். 

சிப்ஸ் மற்றும் ஃப்ரைஸுடன் இந்த சாஸ் தொட்டு சாப்பிடலாம். பராத்தா ரோல், சூப், இட்லி, தோசை, சப்ஜி மற்றும் கிரேவி போன்ற ரெசிபிகளுடன் இதனை சேர்த்து சாப்பிடலாம்.

மார்கெட்களில் இந்த சேஷ்வான் சாஸ் கிடைக்கும். பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரக்கூடிய இந்த சாஸை ஆரோக்கியமாக வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். 

காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவை சேர்த்து செய்யக்கூடிய இந்த சேஷ்வான் சாஸை வீட்டிலேயே செய்து காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். 
இதனை எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.

தேவையானவை

வெங்காயம், 

இஞ்சி, 

பூண்டு

நல்லெண்ணெய் 

மிளகாய் 

கார்ன் மாவு

மிளகாய் தூள், 

வினிகர், 

சோயா சாஸ், 

சில்லி சாஸ் 

தேவையான உப்பு

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும். 

அடுப்பில் தவா வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கி, அத்துடன் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். அதில் சிறிதளவு கார்ன் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 
பின் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த சாஸை நன்கு வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Tags: