ஹாட் சாக்லேட் கொக்கோ டிரிங் செய்வது எப்படி?





ஹாட் சாக்லேட் கொக்கோ டிரிங் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
பால் – 1/2 லிட்டர்

வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி

சர்க்கரை – தேவையான அளவு

டிராங் சாக்லேட் சிப்ஸ் – 3 மேஜைக்கரண்டி

பட்டை – 1 சிறிய துண்டு

உப்பு – ஒரு சிட்டிகை

கொக்கோ – 2 தேக்கரண்டி

கிரீம் – தேவைக்கு

செய்முறை :
ஹாட் சாக்லேட் கொக்கோ டிரிங்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு சாஸ்பானில் கொக்கோ மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும்
நன்கு கலக்கவும் பின்பு அதனுடன் மெதுவாக பால் சேர்க்கவும் நன்கு கலக்கவும்

பின்பு பாலை சூடாக்கவும் கொதிக்க துவங்கும் முன் உப்பு மற்றும் பட்டை சேர்க்கவும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்

கொதிக்க வரும்போது அதனுடன் சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும் பின்பு அதனை கொதிக்க விடவும்
கொதித்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் சூடான சாக்லேட் ட்ரிங் ரெடி பின்பு அதனை டம்ளிரில் விடவும்

பின்பு அதன் மீது கொக்கோவை லேசாக தூவி விடவும் பின்பு படத்தில் உள்ளது போல கிரீமை வைக்கவும் (தேவைப்பட்டால்) சாக்லேட் கொக்கோ ட்ரிங் ரெடி
Tags: